தனுஷ் தனக்கு மருமகன் இல்லை, மூத்த மகன் என்று தெரிவித்த ரஜினிகாந்த்

Loading

தனுஷ் தனக்கு மருமகன் இல்லை, மூத்த மகன் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவகாரத்தை தனுஷ் அறிவித்தார். அது தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.” என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் என்றும், விரைவில் மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷ் தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் வேண்டுகோளை ஏற்று தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தனுஷ் செவி சாய்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மகளின் வாழ்க்கை குறித்து தனது நண்பர்களிடம் ரஜினிகாந்த் புலம்பியதாகவும், தனுஷ் தனது மருமகன் இல்லை என்றும், அவர் தனது மூத்த மகன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *