ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை 

Loading

நீட் தேர்வு முறையைவிட கொடுமையானது அமைச்சர் க.பொன்முடி

சென்னை, பிப்.23-  ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வு முறையைவிட கொடுமையானது என்றும், முதல மைச்சர் அறிவிப்புபடி, மாநில கல்வி கொள்கையை உருவாக்குவ தற்கென குழு ஒன்று அமைப்பதற் கான பணிகள் நடந்து வருகிறது என்றும் உயர் கல்வித்துறை அமைச் சர் க.பொன் முடி தெரித்துள்ளார்.

தேசிய கல்விக்கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப் பாடு கோரும் ஒன்றிய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.2.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினை பெற்று விரிவான ஆய்வினை மேற் கொள்வதற்கு அரசிற்கு குறைந்த காலஅவகாசம் மட்டுமே வழங்கப் பட்டு உள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, அரசின் நிலைப்பாடு விரைவில் அனுப்பப்படும்.

தேசியக் கல்விக்கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர் குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்-அமைச்சரின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழ் நாடு அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயில முதுநிலைத் தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது, தமிழக அரசின் கொள் கைக்கு ஏற்புடையதல்ல.

கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகளில் பட்டப்படிப்பு பயில நுழை வுத்தேர்வு கட்டாயமென்பதை தி.மு.க. தொடர்ந்து கண்டித்து வரு கிறது. ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதை தடுக்கும் நோக் கில் எடுக்கப்படும் இந்த நடவ டிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போதுள்ள 10+2+3 என்ற கல்விமுறையை மாற்றக்கூடாதென்பதே தமிழ் நாட்டின் நிலைப்பாடாகும்.

ஆனால், தற்போதைய தேசிய கல்விக்கொள்கையின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றா மாண்டு முடித்தால் பட்டம் போன் றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழ் நாடு அரசு வன்மையாக எதிர்க் கிறது.

மேலும், மூன்றாண்டு இள நிலைப் பட்டப்படிப்பே தமிழ்நாடு அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்து ரைக்கிறது. இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது.

மாநில கல்விக்கொள்கை

மேற்கண்ட வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் அனைத் துப் பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் நீட் டிக்கப்படுவதுடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடை நிற்றல் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு அதனை எதிர்க் கிறது.

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங் களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

100 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். ஏழை, எளிய விளிம்புநிலை மாணவர்களின் நல னுக்கு எதிரானது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற் கென குழு ஒன்று அமைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அதற்கான பணி களும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி யுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *