உலகில் வெறுப்பு வாதம் அதிகரித்து வரும் சூழலில், மனித நேயமும் சமத்துவமும் தான் இதற்கு ஒரே தீர்வு என்பதை அசால்டாக விளக்கியுள்ளான் பள்ளிச் சிறுவன் அப்துல் காலம்!
சென்னை: உலகில் வெறுப்பு வாதம் அதிகரித்து வரும் சூழலில், மனித நேயமும் சமத்துவமும் தான் இதற்கு ஒரே தீர்வு என்பதை அசால்டாக விளக்கியுள்ளான் பள்ளிச் சிறுவன் அப்துல் காலம்!
சமீபத்தில் இணையத்தில் வைலரான ஒரு வீடியோவை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதில் பள்ளிச் சிறுவன் ஒருவன் மனித நேயம் என்றால் என்ன என விளக்கி இருப்பான்.
உலகில் வெறுப்பு வாதமும் வெறுப்பு பிரசாரமும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், மனித நேயம் நமக்கு எந்தளவு முக்கியம் என்பதைப் போகிற போக்கில் சொல்லி இருப்பான்.
பிடிக்காதவர்கள்
கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இந்த குட்டி பையன் தான் ட்விண்டிங். அப்படி என்ன தான் அச்சிறுவன் கூறிவிட்டான் என்று கேட்கிறீர்களா? பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்று, உங்களுக்குப் பிடிக்காத நபர்கள் யார் எனப் பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பேசிய இந்த குட்டி பையன், “நாம் யாரையும் பிடிக்காத எனச் சொல்லக் கூடாது. இங்கு அனைவரும் நம்மை போன்றவர்கள் தான். சிலருக்கு இங்குக் கஷ்டம் இருக்கும். அவர்கள் கஷ்டத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே யாரிடமும் சொல்லாமல் கூட இருப்பார்கள்.
மனித நேயம்
எனவே, இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக் கூடாது. இங்கு எல்லாரும் நம் நண்பர்கள் தான். என்னைக் கூட எல்லாரும் பல்லன் என்று கூறுவார்கள். இங்கு இருக்கும் எல்லாரும் நமக்கு நண்பர்கள் தான். நம் நாடு ஒற்றுமையான ஒரு நாடு! ஒற்றுமை இல்லாமல் நாம் இருக்கக் கூடாது. இங்கு மனித நேயம் பரவ வேண்டும். இல்லையென்றால், ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறையப் பேர் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே , அங்கு மனித நேயம் மிக முக்கியம்” எனப் பேசியிருந்தான்.
யார் இவர்
இந்த சிறுவனின் பேச்சு உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசச் சொல்லிக் கொடுத்தது பெற்றோர் குறித்தும் அறிந்து கொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர். சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் இச்சிறுவனின் பெயர் அப்துல் கலாம். இவன் சென்னையில் உள்ள கிருத்துவ பள்ளியில் தான் படித்து வருகிறாராம்.அவரது தாயார் தில்ஷாத் போகம். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. அவரது நினைவாகவே தனது மகனுக்கு அப்துல் கலாம் எனப் பெயரிட்டுள்ளார். இது தொடர்பாக தில்ஷாத் போகம் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு, அவனுடன் படிக்கும் சிலர், அவனது பல்லை வைத்துக் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன ரீதியில் காயமடைந்த அவன், அன்று இரவு யாரிடமும் பேசாமல் இருந்தான். அப்போது நான், அனைவருக்கும் பிரச்சினை இருக்கத் தான் செய்யும். நாம் நம்மைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நன்மை செய்தால், ஒரு நாள் அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூறி சமாதாம் செய்தான்” என்கிறார்.
அப்துல் காலம் மாணவி
அவரது தாயார் தில்ஷாத் போகம். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. அவரது நினைவாகவே தனது மகனுக்கு அப்துல் கலாம் எனப் பெயரிட்டுள்ளார். இது தொடர்பாக தில்ஷாத் போகம் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு, அவனுடன் படிக்கும் சிலர், அவனது பல்லை வைத்துக் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன ரீதியில் காயமடைந்த அவன், அன்று இரவு யாரிடமும் பேசாமல் இருந்தான். அப்போது நான், அனைவருக்கும் பிரச்சினை இருக்கத் தான் செய்யும். நாம் நம்மைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நன்மை செய்தால், ஒரு நாள் அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூறி சமாதாம் செய்தான்” என்கிறார்.
பாட்டி வீடு
தில்ஷாத் போகத்தின் தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட தில்ஷாத் போகம், அதன் பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதால், 14 ஆண்டுகளாக தில்ஷாத் போகத்துடன் உடன் அவரது பெற்றோர் உட்பட யாரும் பேசுவதில்லை. ஒரு முறையைத் தனது பாட்டி வீட்டிற்குச் சென்று இருந்த போது அவரது பாட்டி இவரை சேர்த்துக் கொள்ளவில்லையாம். அப்போது தன் மிகவும் காயப்பட்டதாகவும் தன்னை போல மற்றொருவர் காயப்படக் கூடாது என்று அப்போது தான் புரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சிறுவனை இப்போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் வாரி அணைத்துக் கொள்கிறது.
14 ஆண்டுகள் பேசாதவர்
14 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த இரு குடும்பத்தையும் சிறுவன் அப்துல் கலாம் தனது மனித நேயம் குறித்த பேச்சின் மூலம் இணைந்துள்ளான். ஆம், திருமணத்திற்குப் பின்னர், தில்ஷாத் போகத்தின் வீட்டில் இருந்து யாரும் இவரிடம் பேசாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் ஃபோன் செய்து பேசியுள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தில்ஷாத் போகம்.
ஒரே தீர்வு மனிதநேயம்
நாட்டில் தொடர்ச்சியாக வெறுப்பு வாதம் அதிகரித்து வருகிறது. உணவு, உடை, காலாசாரம் என அனைத்தையும் வைத்து வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமத்துவமும் சகோதரத்துவமும் மனிதநேயமும் தான் இதற்கு மாமருந்து என்பதை அசல்டாக கூறியுள்ளார் இச்சிறுவன்! அனைத்து வெறுப்பு வாதங்களும் மனித நேயமும் சமத்துவமும் தான் ஒரே தீர்வு என்பதைப் பேச்சால் விளக்கியது மட்டுமின்றி, 14 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றாகவும் ஆக்கியுள்ளான் இந்த குட்டி பையன் அப்துல் காலம்!