தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில், வணிக பிரதிநிதிகளுடன் ஆலோசனை

Loading

சென்னை, பிப்.22 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோ சனை நடத்தினார்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை யில், அடுத்த கட்டமாக தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் மாதத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

2 கட்ட ஆலோசனை

இதையொட்டி, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இடம் பெறுவது தொடர்பாக, தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (21.2.2022) 2 கட்டமாக நடை பெற்றது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், சிறு, குறு நடுத்தரதொழில் துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனமேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

தொழில் சலுகைகள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையினருக்கான கூட்டம் காலையில் நடந்தது. இதில், தமிழ் நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தற்போது அளிக் கப்பட்டு வரும் சலுகைகள் தவிர தேவைப்படும் அரசு சார்ந்த உதவிகள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட் டவை குறித்து ஆலேசிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி பாதிப்பு

வணிகர்கள் பங்கேற்ற ஆலோ சனை கூட்டம் பிற்பகலில் நடந்தது. இதில், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலேசிக்கப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மளிகைப் பொருட்கள், கட்டுமானப் பொருட் கள் விலையேற்றம் குறித்தும் ஆலேசிக்கப்பட்டது. இதர துறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *