திருவல்லிக்கேணி பகுதியில் மதன் என்பவரை கொலை செய்த வழக்கில் 4 நபர்கள் கைது

Loading

சென்னை -2 , பல்லவன் சாலை , காந்தி நகர் , A பிளாக்கில் வசித்து வந்த மதன் , வ / 36 , த / பெ.மணி என்பவர் ( 20.02.2022 ) அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் வீட்டினருகே பல்லவன் சாலை , S.M. நகர் , 8 வது தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது , சுமார் 7 நபர்கள் மதனை சுற்றி வளைத்து கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர் . இது குறித்து தகவலறிந்து வந்த D – 1 திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மதனின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர் , மேலும் , மேற்படி சம்பவம் குறித்து D – 1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொலை பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . மேலும் , D – 1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து . மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 1.வினோத் ( எ ) வினோத்குமார் , வ / 23 , த / பெ.ஆறுமுகம் , எண் .115 , A பிளாக் , S.M. நகர் . பல்லவன் சாலை , சென்னை -2 , 2.கணபதி , வ / 24 , த / பெ.பச்சை , B பிளாக் , காந்தி நககர் . பல்லவன் சாலை , சென்னை . 3.நரேந்திரன் , வ / 21 , த / பெ.ஜான்சன் ( எ ) ஜானகிராமன் , A பிளாக் , காந்தி நகர் , பல்லவன் சாலை , சென்னை , 4.உசேன் , வ / 19 , த / பெ.சலீம் , 75 வது பிளாக் , 6 வது மாடி , பெரும்பாக்கம் , சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர் . அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது . விசாரணையில் எதிரி வினோத் ( எ ) வினோத்குமாரின் தாயாருடன் இறந்து போன மதன் தகாத உறவு வைத்திருந்ததால் , வினோத் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மதனை கொலை செய்தது தெரியவந்தது . மேலும் விசாரணையில் எதிரி வினோத் மீது ஏற்கனவே 2 அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது . கைது செய்யப்பட்ட எதிரிகள் 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் . மேலும் , மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர் .

0Shares

Leave a Reply