காதல் கணவன் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து காதலர் தினத்தன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Loading

காதல் கணவன் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து காதலர் தினத்தன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து – அஞ்சனாதேவி தம்பதி. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். கட்டிட தொழிலாளியான இவர் நெல்லையில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். கணவர் அருகிலே இருக்க வேண்டும் என விரும்பும் அஞ்சனா தேவி தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். போனில் பேசும்போது இதனையே வற்புறுத்தி வந்துள்ளார். வேலை அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு வரமுடியவில்லை வாரம் ஒருமுறை வந்துசெல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நெல்லையில் இருந்து வாரம் ஒருமுறை தூத்துக்குடி சென்று வந்துள்ளார். இங்கே இருந்து வேலைக்கு செல்லுங்கள் என கணவனிடம் கோபித்துக்கொண்டுள்ளார். மனைவியை சமாதானப்படுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அஞ்சனாதேவி ஒருமுறை தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இருந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 12-ம் தேதி தூத்துக்குடி சென்ற அரசமுத்து 13-ம் தேதி ஞாயிற்றுகிழமை நெல்லை புறப்பட்டுள்ளார். காதலர் தினமாக பிப்ரவரி 14-ம் தேதி அரசமுத்துவுக்கு போன் செய்த அஞ்சனா தேவி நீங்கள் இன்று வீட்டுக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளார். நேற்றுதானே ஊரில் இருந்து வந்தேன் இன்று கூப்பிட்டால் எப்படி வருவது. வேலைக்கு இருக்கிறது எனக் கொஞ்சம் கடுமையாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சனாதேவி நீங்கள் வரவில்லை என்றால் நான் செத்துப்போவேன் என மிரட்டியுள்ளார். வழக்கமாக இப்படிதானே சண்டைப்போடுவார் என அஞ்சனாதேவியின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியுள்ளார். போனை வைத்துவிட்டு வேலையை கவனித்துள்ளார்.

இந்நிலையில் இரவு வேலை முடிந்து 7 மணியளவில் மனைவிக்கு போன் செய்துள்ளார். போன் ரிங் ஆகிறது ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. நீண்ட நேரமாக போன் செய்து எடுக்காததால் சந்தேகமடைந்தவர் பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு போன் செய்து கொஞ்சம் என்னவென்று பார்க்க கூறியுள்ளார்.

பக்கத்துவீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவு தட்டியும் அஞ்சனா தேவி கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது அஞ்சனா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து அரசமுத்துவுக்கு அந்தப்பெண் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டினுள் அந்தப் பெண் கோலப்பொடியால் ஐ லவ் யூ மாமா என எழுதிவைத்திருந்தார். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *