இன்றைய ராசி பலன்
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் வரும் வீண் விரைய செலவுகளை தவிர்த்தால் நிதி நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக பேசலாம். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
ரிஷபம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.
சிம்மம்
சந்திரன் உங்களுடைய ராசிக்குள் பயணத்தை தொடங்குகிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்தி வீடு தேடி வரும். சிலருக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும். பெரிய அளவில் தொழில் முதலீடுகளை தவிர்த்து விடவும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும் பயணங்களால் நன்மையும் சந்தோஷமும் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.