ஒளிப்பட கலைஞர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, பிப்.15 பத்திரிகை ஒளிப்படக் கலைஞர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை யு.என்.அய் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஒளிப்பட பத்திரிக்கையாளர் டி.குமார் தனது அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தற் கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
உடல் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் திங்கள்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட் டது. 56 வயதான குமாருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒளிப்படக் கலைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த பத்தி ரிக்கை ஒளிப்பட கலைஞர் டி. குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, ரூ. 3 இலட்சம் பத்திரிகை
யாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல மைச்சர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற, யு.என்.அய். செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த ஒளிப்படக் கலைஞராகவும் பணியாற்றிய டி.குமார் அவர்கள் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.