SBI யின் முக்கிய எச்சரிக்கை பான் கார்டுடன் தங்கள் ஆதார் அட்டையை இணைக்குமாறு அறிவித்துள்ளது
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நாடு முழுவதும் உள்ள தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2022 க்கு முன் தங்கள் பான் கார்டுடன் தங்கள் ஆதார் அட்டையை இணைக்குமாறு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தேதிக்கு பின்பும் பான் – ஆதார் இணைப்பை நிகழ்த்தவில்லை என்றால் அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது. எஸ்பிஐ இந்த தகவலை ஒரு ட்வீட் மூலம் அறிவித்துள்ளது, “எங்கள் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சிரமத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கிச் சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.” என்று எஸ்பிஐ-யின் அந்த ட்வீட் கூறுகிறது.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139ஏஏ-வின் படி, மார்ச் 31, 2022 க்குள் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை (PAN) ஆதார் எண் உடன் இணைப்பது கட்டாயமாகும் என்று வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை செய்யவில்லை என்றால் ஏப்ரல் 1, 2022 முதல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் எஸ்பிஐ கார்டு செயல்படாது. எனவே, உங்கள் கிரெடிட் கார்டில் தடையில்லா சேவைகளைப் பெற, பயனர்கள் தங்களது பான் எண்ணை ஆதார் கார்டு உடன் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே இணைக்க வேண்டும்.
இதையும் படிங்க.. UIDAI : ஒரே ஒரு மொபைல் நம்பர் இருந்தா போதும்.. மொத்த குடும்பத்திற்கும் ஆதார் PVC கார்டு வாங்கலாம் தெரியுமா?
நினைவூட்டும் வண்ணம், இதற்கு முன்னதாக, பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30, 2021 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், தற்போது நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு பான் – ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு பான் – ஆதார் அட்டையை இணைப்பது பற்றி போதுமான தெளிவு இல்லையென்றால், இதோ அதற்கான எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள்:
ஆன்லைன் வழியாக பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?
01. https://www.incometaxindiaefiling.gov.in/home என்கிற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்லவும்.
02. ஹோம் பேஜில் உள்ள ‘லிங்க் ஆதார்’ என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
03. இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள்.
04. ஆதார் கார்டில் உங்கள் பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால், ‘ஆதார் அட்டையில் நான் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது’ (I have only year of birth in the Aadhaar card) என்ற செக்பாக்ஸை டிக் செய்யவும்.
05. தேவையான விவரங்கள் மற்றும் கேப்ட்சா கோட்-ஐ உள்ளிட்டு, ஒடிபி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
06. பிறகு லிங்க் ஆதார் என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும். அவ்வளவுதான்! உங்கள் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.
ஆன்லைன் வழியாக இல்லாமல், எஸ்எம்எஸ் வழியாகவும் உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க முடியும். அதை செய்வது எப்படி என்கிற எளிய வழிமுறைகள் இதோ:
எஸ்எம் எஸ் வழியாக பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?
01. உங்கள் மொபைலில் மெசேஜ் அல்லது எஸ்எம்எஸ்-ஐ திறந்து, மெசேஜ் பாக்ஸில் UIDPAN<உங்களின் 12 இலக்க ஆதார் எண்> உங்களின் 10 இலக்க பான் எண்> என டைப் செய்யவும்.
02. இப்போது, 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு மேற்குறிப்பிட்ட மெசேஜை அனுப்பவும். உங்கள் பான் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.