பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள “விடுதலைப்போரில் தமிழகம்”
![]()
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள “விடுதலைப்போரில் தமிழகம்” அலங்கார ஊர்திகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி ப. ஸ்ரீ வெங்கட பிரியா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் “விடுதலைப்போரில் தமிழகம்” அலங்கார ஊர்திகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, அவர்கள் தலைமையில் இன்று 08.02.2022 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
“விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில், 26.01.2022 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்; பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அனுப்பிவைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில்,
வ.ஊ.சி.அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு 11.02.2022 அன்று மாலை வருகை தர உள்ளது. அலங்கார ஊர்திகளை மாவட்ட எல்லையான குன்னம் பகுதியில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 12.02.2022 மாலை வரை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அலங்கார ஊர்திகளை நிறுத்தி காட்சிப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்து.
அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் எளிதில் கண்டுகளிக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கினைந்து சிறப்பாக மேற்கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பாரதிதாசன், உதவி இயக்குநர் கனிமவளம் சத்தியசீலன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி, கோட்டப்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் ராஜேந்திர விஜய், தோட்டகலைத்துறை துணை இயக்குநர் இந்திராணி உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், ஏ.கே.பெருமாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

