பள்ளி மேலாண்மைக்குழுவை புதுப்பித்து வலுப்படுத்த சிறப்பு முயற்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிப் பதிவு

Loading

சென்னை, பிப்.7 அரசு பள்ளிகளை வெற்றிப்பாதையில் பீறுநடை போட வைக்கும் பள்ளி மேலாண்மைக்குழுவை மேம்படுத்த சிறப்பு முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த பள்ளி மேலாண் மைக் குழு தொடர்பாகவும், அது எவ்வாறு செயல்படும்? என்றும், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஒரு காணொலிப் பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் பேசியதாவது:-

கல்வியும், மருத்துவமும் தமிழ்நாடு அரசின் இரு கண்கள். இன்றைய குழந் தைகளோட சிறப்பான எதிர்காலத்தின் நுழைவுவாயில் கல்வி தான். தமிழ் நாட்டில் இருக்கின்ற 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகள் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கி, அவர்களை முன்னேற்ற பாதையில் ஏற்றி வைக்கும் ஏணிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளி என்பது மாணவர்களின் கல்வி ஒளியை ஏற்றி வைக்கும் சுடர் விளக்கு. அந்த சுடர் விளக்கை தொடர்ந்து பிரகாசிக்க செய்கிற தூண்டுகோலாக இருப்பது பள்ளி மேலாண்மைக்குழு.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நோக்கம். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி வளாகங்களை மேம்படுத்தி பராமரித்தல், பள்ளிகளில் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக்குதல், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக் குதல், குழந்தைகளின் கற்றல் அறிவை மேம்பாடு அடைய செய்தல் போன்ற செயல்பாடுகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற முடியும்.

சிறப்பு முயற்சிகள்

அதோடு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அனைத்து வகை வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல் களில் இருந்து குழந்தைகளை பாது காக்கவும், மாண வர்கள் தங்களுடைய பிரச்சினைகள், தேவைகளை தெரிவிக்கும் வண்ணம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை வெற்றிப் பாதையில் பீறுநடை போட வைக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி மேலாண்மைக் குழுவில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பள்ளி மேலாண்மைக் குழுவை புதுப்பித்து, வலுப்படுத்துவதற்கும் இந்த அரசு சிறப்பு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கு முதற்கட்டமாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் சமூக வளங்களை பயன்படுத்தி அரசு பள்ளிகளோடு செயல்பாடுகளை மேம் படுத்துவதற்கு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 2-வது வாரத்துக்குள் பள்ளி மேலாண் மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவும் நமக்கு நாமே திட்டம் போன்றது தான்.

மக்கள் பங்கேற்புடன் அரசு பள்ளி களை மேம்படுத்தும் திட்டம். மாணவ செல்வங்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தில் இணைவோம் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

இவ்வாறு அதில் அவர் பேசினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *