திமுக..அதிமுக..பாஜக..!: கோவையில் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திய பெண் வேட்பாளர்கள்..!!
கோவை: கோவையின் 66வது வார்டில் போட்டியிடுகின்ற திமுகவின் சாந்தி முருகன், அதிமுகவின் லதா திருமுகம், பாஜகவின் கவிதா ராஜன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, அரசியல் நாகரிகம் கருதி மரியாதை நிமிர்த்தமாக பேசிக்கொண்டனர்.
பெண் வேட்பாளர்கள் 3 பேருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்காளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை மும்முரமாக தாக்கல் செய்து வருகின்றனர்.