சென்னையில் பெண்ணை அடித்து பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்!
சென்னை அருகே பேருந்தை தாமதமாக எடுத்ததை கேள்வி கேட்ட பெண்ணை பேருந்து ஓட்டுநர் அடித்து, கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது-38). இவரும் இவருடைய கணவர் செந்தில்குமார் ( வயது-37) ஆகிய இருவரும் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர். அங்கு 5.10 க்கு பெரும்மாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்லக் வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்தை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓட்டுநரிடையே கேட்டபோது அதிகார தோரணையில் காத்திருக்கங்கள், இல்லையேல் இறங்கி செல்லுங்கள் என ஒருமையில் பேசியதால் ஓட்டுநருக்கும் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் தாக்கி தள்ளிவிட்டதில் கீழே விழுந்தனர், முருகம்மாள், மயங்கியுள்ளார். இதைக்கண்ட பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். மேலும் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளை அலைகழிப்பதாகவும், பேருந்தை தாமதமாக எடுப்பதாகவும், பயணிகளிடையே அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.