பார்லிமெண்ட் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? தலைமை தான் முடிவெடுக்கும்:ஜெயகுமார் அதிரடி பதில்

Loading

சென்னை,பிப்- 1
பார்லிமெண்ட் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் அளித்த பேட்டி

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாவே நடைபெற்றது. ஆனால், பாஜகவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது, , எங்களை பொறுத்தவரை கட்சி நலன் பாதிக்காத வகையில் மட்டுமே முடிவெடுக்க முடியும் . . இடங்கள் பகிர்வது காரணமாக தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது பாஜக மேற்கொண்ட முடிவு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும் பார்லிமெண்ட் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது , சட்டமன்றம், நாடாளுமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவர்களோடு கூட்டணி இருந்தது என்றும், தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது , எனவே எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி உள்ளதா இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றார் மாஜி அமைச்சர் ஜெயகுமார்

மேலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சாதனையா வேதனையா என பார்த்தால் சாதனைதான் வெற்றி பெறும் என்று கூறினார். திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்த நிலையில் பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது குறித்த கேள்விக்கு, சிங்கம் சிங்கிலாக தான் வரும், அதிமுக சிங்கம் என்றும் மகத்தான வெற்றி அடையும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *