நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!
![]()
நடிகர் விஜயின் காருக்கு நுழைவு வரி செலுத்த அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு.
BMW காருக்கு தாமதமாக நுழைவு வரி செலுத்தியதற்கு அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடுத்திருந்தார். 2021-ல் வணிகவரித்துறை உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. தமிழக அரசு அவகாசம் கோரப்பட்டுள்ளதை அடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2005-ல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு தாமதமாக நுழைவு செலுத்தப்பட்டதால் 400% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 400% அபராதமாக ரூ.30.23 லட்சம் செலுத்த கோரிய அரசின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் பிப். 16ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

