கொரோனா முதல் அலை ஓய்ந்த பின்னர் தியேட்டர்ளை சரிவில் இருந்து மீட்க வெளியான திரைப்படம் விஜயின் மாஸ்டர்
கொரோனா முதல் அலை ஓய்ந்த பின்னர் தியேட்டர்ளை சரிவில் இருந்து மீட்க வெளியான திரைப்படம் விஜயின் மாஸ்டர்.
இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி வர வைத்தது. அதன் பிறகு இரண்டாம் அலைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் மாநாடு போன்ற திரைப்படங்களின் மாபெரும் வெற்றி மீண்டும் மக்களை தியேட்டருக்கு வர வைத்தது.
அதன் பின்னர் தற்போது மூன்றாவது அலை கொஞ்சம் தனித்துள்ளது. கட்டுப்பாடுகள் கொஞ்சம் நீங்கி தியேட்டர்கள் மீண்டும் பழைய நிலையில் திறக்கப்பட்டன. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி RRR மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளியாகிவிடும். மீண்டும் மக்கள் தியேட்டருக்கு தைரியமாக வந்துவிடுவார்கள் என நம்பி கொண்டிருந்த வேளையில் கட்டுப்பாடுகள் அதிகரித்து அந்த பட ரிலீஸ்கள் தள்ளிப்போயின.
இதையும் படியுங்களேன் – மீண்டும் காதல் மன்னனாக விஜய்.! பிப்ரவரி 14 காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!
இதனால் மூன்றாவது அதை முடிந்த பிறகு தற்போது மீண்டும் சற்று இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் தியேட்டருக்கு வர வைக்க தியேட்டர் அதிபர்கள் பெரிய படங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். முக்கியமாக வலிமை.
இந்த வேளையில் தற்போது முதல் பெரிய படமாக விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் எனும் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
தியேட்டர் அதிபர்கள் அஜித்தின் வலிமை மற்றும் ராஜமவுலி இயக்கியுள்ள RRR அல்லது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் விஷால் தனது திரைப்பட ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பார்க்கலாம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வீரமே வாகை சுடும் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.