நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை

Loading

சென்னை, ஜன.30 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார். அப்போது, நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சிக்கு வேண்டிய இடங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ஆம்தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள், தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இடப்பங்கீட்டை நிறைவு செய்யாத நிலையில், வேட்புமனு தாக்கலும் 28.1.2022 அன்று தொடங்கியது.
இந்தநிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சிக்கு வேண்டிய இடங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
அதனைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (29.1.2022) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அவருடன் திருப் போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் உடன் சென்றனர்.
இதேபோல், தி.மு.க. தரப்பில் கட்சி யின் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இருந் தனர். காலை 9.45 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்பின்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேவையான இடங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொல்.திருமா வளவன் பட்டியலை வழங்கினார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசுமாறு கேட்டுக்கொண்
டார்.
பின்னர், வெளியே வந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சுமுக பேச்சுவார்த்தை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில் ஆங்காங்கே தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 2, 3 நாட்களாக சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவி இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டி ருக்கிறோம்.
50 சதவீத இடங்கள் பெண் களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது போற்றுத லுக்குரியது. அதற்காகவும் நன்றி தெரிவித்தோம். பேச்சுவார்த்தை முடிந்து பிப்ரவரி 1ஆம்தேதிக்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *