சீனாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரிப்பு ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரிப்பு

Loading

கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியா 22.9 மில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34% அதிகம்.

2019-ல் இந்தியா 17.1 பில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது.

அதேபோல சீனாவிலிருந்து இந்தியா பெற்ற இறக்குமதியும் 2021-ம் ஆண்டில் 28% அளவில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 87.5 பில்லியன் டாலர் அளவில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. 2019-ம் ஆண்டில் அது 68.4 பில்லியன் டாலராக இருந்தது.

2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மூலப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேசமயம் நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி 14.7-லிருந்து 10.4% ஆக குறைந்துள்ளது.

2021-ல் இந்தியா – அமெரிக்கா இடையே 112.3 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடை பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியா – சீனா இடையில் சென்ற ஆண்டு 110.4 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் 68.4 பில்லியன் டாலர், சவூதி அரேபியாவுடன் 35.6 பில்லியன் டாலர் அளவில் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *