ஓஸ்லோ: நார்வே நாட்டில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை ,வெறும் கையுடன் திரும்பிய தலிபான்
ஓஸ்லோ: நார்வே நாட்டில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது, மனிதாபிமான உதவி, பெண்களின் உரிமைகள் பற்றியே தலிபான்கள் அதிகம் பேசியதாக தெரிய வந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் தலிபான்கள் நடத்திய 3 நாட்கள் அமைதி பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. ஆனால் அப்போது பேசிய ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், மனிதாபிமான உதவி, பெண்களின் உரிமைகள் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த மக்கள்தொகையில் பாதி பேர், அதாவது 2.3 கோடி மக்கள் பட்டினியாலும், 90 லட்சம் பேர் பட்டினியை நோக்கியும் போய் கொண்டுள்ளனர். உணவுப் பொருட்களை வாங்க சொத்துக்களை விற்க தொடங்கி உள்ளனர். குளிருக்காக தங்கள் மரச்சாமான்களை எரிக்கவும், குழந்தைகளை விற்க வேண்டிய சூழலுக்கும் கூட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து ஆப்கானிஸ்தானையும், மக்களையும் பாதுகாக்க அரசு இயன்ற அளவு முயற்சிக்கும். பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் அமீர் கான் தெரிவித்தார்