தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு அமைச்சரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரி வருத்தம்
சென்னை, ஜன- 28
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்தாத விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் வருத்தம் தெரிவித்தார்
குடியரசு தினத்தன்று ரிசர்வ் வங்கி வளாகத்தில் அதன் மண்டல இயக்குனர் எஸ்எம்என் சுவாமி தேசியக்கொடியேற்றி வைத்தார், இந்த நிறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது, இதற்கு பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.ஆனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெரும் வாக்குவாதம்ஏற்பட்டது, ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்,
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல செயலாளர் எஸ் எம் சாமி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன,