நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை
சென்னை, ஜன- 28
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தாருங்கள் என்று கவர்னருக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்
குடியரசு தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார், இது குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதில் அறிக்கை
நீட் தேர்வு காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் தகுதிப் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தின் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்இ போன்ற பிற பாடத்திட்டத்தில் படித்த 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் கவர்னர் , பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களை போல தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளை பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரி அல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் மொழிப் போராட்ட வரலாறை அறிந்து அவருக்கு பிற இந்திய மொழிகள் என்பதை இந்தியை முன்னிலைப்படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய பிரதமர் நேரு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை கட்டாயமாக இந்தியை திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தார் என்பதை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன் வடிவை தன்னுடைய ஒப்புதலை விரைவில் அழித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவ படிப்பு கனவுகளை நிறைவேற்ற முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் என நான் நம்புகின்றேன்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்