தலைநகரமாகும் திருப்பதி. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

Loading

13 புதிய மாவட்டங்கள் உதயம். தலைநகரமாகும் திருப்பதி. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு பாலாஜி என்ற மாவட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டமும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் உள்ளன. இந்த 13 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாவட்ட தலைநகரம் அதிக தொலைவில் உள்ளதால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 13 மாவட்டங்களையும் 26 மாவட்டங்களாக பிரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி மாவட்டங்களாகவும், கடப்பா மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட உள்ளன அதேபோல்,
சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும்,பாலாஜி மாவட்டத்துக்கு திருப்பதி தலைமையிடமாகவும் இருக்கும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *