தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில்ஐந்துநாட்களுக்குமிதமானமழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதனிடையே நேற்று புதுச்சேரியில் திடீரென மழை பெய்தது.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலும் மழை பெய்தது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக நகரப் பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக இரவு 7 மணி வரை நகரப் பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை.