Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜனவரி 24,2022

Loading

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இன்று நீங்கள் துணிச்சலுடன் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சுப செலவுகள் அதிகரிக்கும். அஷ்டம சனியின் தாக்கத்தினால் சிலருக்கு மன உளைச்சல் உண்டாகும். குருவின் பார்வையினால் நன்மைகள் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரலாம். சுப செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப விசயங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

கன்னி
சந்திரன் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். உற்சாகமாக இருப்பீர்கள். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடி வரும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.

துலாம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். பெற்றோர்கள், உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் லாபம் அமோகமாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும் வங்கி சேமிப்பு உயரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கும் சந்திரனால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் தேடி வரும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் நேரடி பார்வையினால் மனதில் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *