மெட்ரோ ரயில் நிலையத்திற்கு காந்தியார் பெயர் மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு

Loading

போர்ட் லூயிஸ், ஜன. 22- இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரிசியசில், இந்தியா வின் உதவியுடன் கட்டப் பட்டுள்ள சமூகக் குடியிருப் புகளை இந்திய பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத்தும் காணொலி வாயிலாக திறந்து வைத்தனர்.

மேலும், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் மின்உற்பத்தி கொண்ட சோலார் திட்டங்களை யும் மொரிசியசில் தொடங் கினர். இவை இந்தியாவின் வளர்ச்சி ஆதரவு திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்படுகின்றன.

இதுதவிர, மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற் றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மொரிசியசுக்கு இந்தியா சார் பில் 190 மில்லியன் அமெ ரிக்க டாலர் கடன் வழங் குவது தொடர்பான ஒப் பந்தம் மற்றும் சிறிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவையும் மேற் கொள்ளப்பட்டது.

மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்திற்கு இந்தியா வின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முக்கிய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘காந்தியார்’ என பெயர் சூட்டப்படும் என மொரிசியஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *