ஊரகப் பகுதி வளர்ச்சித் திட்ட உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்

Loading

புதுதில்லி, ஜனவரி 20, 2022:

இந்தியா தனது சுதந்திர நூற்றாண்டை 2047-ல் கொண்டாடும் வரையிலான அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையை அனைத்து பஞ்சாயத்துராஜ் அமைப்புகளும் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

ஊரகப் பகுதி வளர்ச்சித் திட்ட உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டு பேசிய அவர், முழுமையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் வகுக்க வேண்டும் என்றும் உள்ளூர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதர வளர்ச்சிப் பணிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பஞ்சாயத்துகளில் வளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றிலும் உள்ளாட்சி அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஊரகப் பகுதி வளர்ச்சித் திட்ட உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, இந்தியா 2047 லட்சியத்தை எட்டுவதற்கான உறுதிமொழி பத்திரமாக உள்ளாட்சி அமைப்புகள் கருத வேண்டும் என்று அவர் கூறினார்.

கிராமப்புறப் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஊரகப் பகுதி வளர்ச்சி திட்ட உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply