ஹேப்பி நியூஸ்.. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் தேர்வு.. வெளியான சூப்பர் தகவல்..!!!!
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
அதன் பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கியது. வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு டிசம்பர் மாதம் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் தொற்று பரவ காரணமாக திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆன்லைன் மூலம் திருப்புதல் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் 10 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் பற்றி எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் 10 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இணையவழியில் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அரசின் அறிவிப்பை அடுத்து நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின் படி வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வீட்டிலிருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேர்வு எழுதிய பின்னர் வினாத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் இதை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார் மாணவர்களுக்குத் தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.