பண்ருட்டி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

Loading

பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் -ன் 105 -வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் நகர செயலாளர் கனகராஜ் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் கலந்து கொண்டு எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் அவைத்தலைவர் சுந்தரம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், புஷ்பவதி சிவச்சந்திரன், நகர அம்மா பேரவை செயலாளர் சேகர், துணை செயலாளர்கள் முருகன், சௌந்தரராஜன், வக்கீல் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் வனராஜ், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் ரமேஷ்குமார், முன்னாள் நகர செயலாளர் பிரபு, பொருளாளர் பன்னீர்செல்வம் மாவட்ட பிரதிநிதிகள் கலைக்குமாரன், ரங்கப்பன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply