முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா செஞ்சியில் இனிதே நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி.
முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா செஞ்சியில் இனிதே நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவம் இணைச்செயலாளர் டாக்டர் யோகேஸ்வரன் அவர் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாராணி ஏழுமலை அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி புடவைகள் வழங்கப்பட்டன. கழக உடன்பிறப்புகள் மாவட்டம் மற்றும் ஒன்றிய கழகத்தின் பொறுப்பாளர்களான துரை என்ற லட்சுமிகாந்த், பூங்குன்றம், சூரியபிரகாஷ், ஏழுமலை, காசி, தமிழ், ஈச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பரணிதரன், பொன்பத்தி வெற்றி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழுப்புரம் வடக்கு மாவட்டம் இணை செயலாளர் டாக்டர்யோகேஸ்வரன் செய்திருந்தார். இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை பெற்று பயனடைந்தனர்.