தவற விட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண்
தவற விட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண்னை பாராட்டிய சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர்.
நினைவு பரிசு வழங்கினார்
சாயர்புரம்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள புளிய நகரில் அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் முத்துலெட்சுமி என்ற பெண் தனது இரண்டரை பவுன் தங்க நகையை கீழே தவற விட்டார்.அதை கண்டு புளிய நகர் ஜெயபிரகாஷ் சாரதா தம்பதியர் அந்த இரண்டரை பவுன் தங்க நகையை உரிமையாளர் முத்து லெட்சுமி அவரிடம் கண்டு ஒப்படைத்தார்.இந்த சம்பவத்தை கேட்டு சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜா அவர்கள் தங்க நகையை ஒப்படைத்த ஜெயபிரகாஷ் சாரதா தம்பதியரை நேரில் சென்று
பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் புளிய நகர் ஊர் தலைவர் த.அறவாழி மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஞானராஜ் மற்றும் தர்மகர்த்தா ஜெகன்.முன்னால் வார்டு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் திருமணி.ஆகியோர் கலந்து கொண்டனர்.