மாட்டுக்கு அலங்கார கயிறுகள் புதிய புதிய வடிவில். வியாபாரம் மந்தம்

Loading

பாலக்கோடு.ஜன.14-
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலக்கோடு பகுதியில் மாடுகளுக்கு தேவையான அலங்கார கயிறு மற்றும் சலங்கை உள்ளிட்டவைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம்.
வரும் சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில் விவசாயிகள் தோழனான உழவு மாடுகளை அழகு படுத்தி கௌரவிக்கும் விதமாக மாடுகளுக்கு அலங்கார கயிறுகள், சலங்கை உள்ளிட்டவைகளை அணிவித்து விவசாயிகள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.
பாலக்கோடு சந்தை கடை அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அலங்கார கயிறுகள் விற்பனை செய்யும் கடையில், தங்களது மாடுகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, அலங்கார கயிறு, சலங்கை உள்ளிட்டவைகளை  விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கொரோனா காரணமாக கயிறு விற்பனை சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கும் வியாபாரிகள், கயிறு விலை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சலங்கை கயிறு 100 ரூபாக்கும், பாசிக்கயிறு 40 ரூபாய்க்கும், கொம்பு கயிறு 20 ரூபாய்க்கும், சங்கு கயிறு 20 ரூபாய்க்கும், திருகாணி 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கயிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
0Shares

Leave a Reply