நூதன முறையில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 வாலிபர்கள் கைது!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கேத்தாண்டப்பட்டி சஞ்சிவினூர் ஏரி கரை அருகே அடையாளம் தெரியாத 3 நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
அப்பொழுது போலிசாரை கண்டதும், கைது அச்சம் காரணமாக அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்ற போது. அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் மந்திரி வட்டம் பகுதியை சேர்ந்தவர் நால்வர் குறித்து தெரிய வந்தது.. பழனி இவரது மகன் சக்திவேல், வயது 24, தங்கம் மகன் பசுபதி, வயது 23 சிக்கணாங்குப்பம் டேங்க் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மகன் அபினேஷ் வயது 19, குமரன் மகன் ரமேஷ், வயது 19 என்ற அடையாளம் தெரிய வந்தது. மேலும் இவர்களை சம்பவ இடத்தில் சோதனை செய்த போது இரும்புராடு, சிறிய கடப்பாரை, மிளகாய்ப்பொடி, ஆகியவை வைத்து கொண்டிப்பது தெரிய வந்தது. இதனை வைத்துக் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிக் வந்ததாக தெரிவித்தனர்.