தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Loading

பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு சென் னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டு வார்கள். இதற்கிடையே, கரோனா பரவல் அதிகரிப்பதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத னால், பொதுமக்கள் பொங்கலுக்கு அதிகஅளவில் புறப்பட்டுச் செல் வார்களா என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.

பொங்கல் விழாவை முன்னிட்டு, வரும் 11ஆம் தேதி (நாளை) முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந் துகள் இயக்கப்படும். மேற்கண்ட 3 நாட்களில் 10,468 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக கேட்ட போது,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பொங் கலை யொட்டி ஏற்கெனவே அறிவித்தபடி, வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க தயா ராக உள்ளோம். பேருந்து நிலை யங்களில் கரோனா முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை செய்து வரு கி றோம். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு விரைவு பேருந்து களில் பயணச்சீட்டுகள் முன்பதிவு சற்றுகுறைவாக இருக்கிறது. ஏற் கெனவே, 60 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பயணச்சீட்டு முன் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பயணி களின் தேவைக்கு ஏற்பசிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.

சென்னையில் ஏற்படும் போக் குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கே.கே.நகர் (ஈசிஆர் வழியாக புதுச்சேரி, சிதம்பரம்), மாதவரம் (ஊத்துக்கோட்டை, ஆந் திரா மாநில பேருந்துகள்), தாம்பரம் ரயில் நிலையம் (திருவண்ணாமலை, கடலூர்), தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (கும்ப கோணம், தஞ்சாவூர்), பூந்தமல்லி (வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி) மற்றும் கோயம்பேட்டில் இருந்து இதர மற்றும் தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்.

எனவே, மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து முன்கூட்டியே திட்ட மிட்டு பேருந்துகளில் பயணம்செய்ய வேண்டுகிறோம். பொங்கல் விழா வை முன்னிட்டு 10,468 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும். நாளை முதல் இந்தபேருந்துகளை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *