அமைச்சர்கள் இலாகாக்களில் மாற்றம்
சென்னை, ஜன- 13
தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இலாகாக்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு
தொழில்துறை அமைச்சரால் கையாளப்பட்ட சர்க்கரைத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, விமான நிலையங்கள் – போக்குவரத்துத்துறை அமைச்சருக்குப் பதிலாக தொழில்துறை அமைச்சரால் கையாளப்படும்.வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனித வளத்துறையிடமிருந்து வழங்கப்படும்.என்று தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது,