பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு புகார் விசாரணைக்கு தயார் : ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதிலடி
சென்னை, ஜன- 12
பொங்கல் பரிசுப்பொருட்களில் முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு தயார் என்று ஓபிஎஸ்க்கு அமைச்சர் சக்ரபாணி பதிலளித்துள்ளார்
பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமற்று இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த புகார்கள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரணமாக ரூ 4000 வழங்கப்படும்என்று முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதியளித்தார், அதன்படியே ஆட்சிக்கு வந்ததும் 4000 வழங்கினார், பொங்கலையையொட்டி 21 வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, அந்த பொருட்களில் பைகள் தயாரிக்கும் பணி, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வழங்கப்பட்டிருந்தது, கொரோனா காரணமாக சமூக இடைவெளியுடன் பைகள் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது,எனவே பைகள் கொண்டு வந்தால் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கிடையில் சமூக வலைதளங்களில் கருங்காலிகளை பயன்படுத்தி பரிசு பொருட்கள் குறித்து வதந்தி பரப்புகிறார்கள், ராமநாதபுரத்தில் அரிசியில் வண்டு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது, உடனடியா அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த தகவலை பரப்பியவர் அதிமுக பிரமுகர் என்று கண்டறியப்பட்டது, பொங்கல் பரிசு பொருட்களில் புளியில் பல்லி இருந்ததாக திருத்தணியில் வதந்தி பரப்பப்பட்டது, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ராமநாதபுரத்தில் ஒரு ரேஷன் கடையில் 200 பைகளை அடுக்கி வைத்து கொண்டே ஒரு நபர் மக்களுக்கு இல்லை என்று அனுப்பி கொண்டிருந்தார், கடைசியில் அவர் அதிமுக பிரமுகர் என்பது தெரிந்தது, அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களை விட அதிகமாகவே வழங்கியிருக்கிறோம், 21 பொங்கல் பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ618 ஆகும். பொங்கல் பரிசு பொருட்கள் சரியாக கிடைக்காவிட்டால் பொதுமக்கள் புகார் செய்ய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன, ஒரு வேளை பொருட்கள் சரியாக கிடைக்காவிட்டால் அவை நாளைக்குள் ( இன்று) முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,
சீரகம், கடுகு, கோதுமை மாவு போன்றவை வெளிமாநிலங்களில் இருந்து தான் வருகின்றன என்ற அடிப்படை புரிதல் கூட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு இல்லை.மேலும் அவற்றை தமிழ்நாட்டில் இருந்து தான் டெண்டர் போட்டு எடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இது குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டால் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்,பொங்கல் பரிசு முதல் பை கொடுப்பது வரை அதிமுக ஆட்சியில் தான் ஊழல் தலைவிரித்தாடியது, திமுக ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை., அது குறித்து ஆதாரம் இருந்தால் தரட்டும் எந்த விசாரணைக்கும் அரசு தயாராக இருக்கிறது, பொங்கல் பரிசு பொருட்கள் தரமாக இருப்பதாக அதை வாங்கி செல்லும் மக்கள் பாராட்டுகிறார்கள், அதை கேட்டு ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் வயிற்றெரிச்சலில் குற்றம் சாட்டுகிறார்கள் இவ்வாறு அமைச்சர் சக்ரபாணி கூறினார்,