பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Loading

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில்
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
கார்மேகம் செய்தியாளர்களுடன்
நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் செய்தியாளர்களுடன் இன்று (11.01.2022) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றித்தர துறை அலுவலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பேளுர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் பரிசோதனை மையம், ஆய்வகம், அவரச சிகிச்சைப் பிரிவு மற்றும் இரத்த பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தும்பல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், இடையப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டில் 1,500க்கும் மேற்பட்ட தொகுப்பு மரக்கன்றுகள் நடும் பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது.

மேலும்,14–வது நிதிக் குழு மானியத்தில் தும்பல் அரசு உயர்நிலைப் பள்ளி முதல் எட்டிமரத்து ஓடை வரை ரூ.22.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் என மொத்தம் ரூ.35.60 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகல்ராயன் தெற்கு நாடு கிராமத்தில் உள்ள கைக்கான் வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் அணைக்கு திருப்பும் திட்டப் பணிகள் ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் 50 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மீதமுள்ள இப்பணிகளை முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர், கருமந்துறையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சேலம் விற்பனைக் குழுவின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டுவந்த நிலக்கடலை, கடுக்காய் உள்ளிட்ட விற்பனைப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த செய்தியாளர் பயணத்தின்போது பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *