காரைக்குடி அழகப்பா பல்கலையில் இராணி வேலு நாச்சியாரின் 292 ஆவது பிறந்த நாள் விழா

Loading

காரைக்குடி
அழகப்பா பல்கலையில் இராணி வேலு நாச்சியாரின் 292 ஆவது பிறந்த நாள் விழா.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் 292 வது பிறந்த நாள் இணையவழியில் நடைபெற்றது.

வரலாற்றுத்துறை தலைவர் (பொ) முனைவர் சரவணகுமார் அனைவரையும் வரவேற்றார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பேரா. கருப்பசாமி தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் தமது உரையில்
இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடிவரும் வேளையில் நமது அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரமங்கை இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து 17ஆம் நூற்றாண்டிலேயே போர் தொடுத்தவர் வீரமங்கை வேலு நாச்சியார் என்றும் ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கையை முற்றிலும் முறியடித்தவர் எனவும் கூறினார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்
என்றும் புகழாரம் சூட்டினார்.

அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர்(பொ) பேரா.சி.சேகர் தனது வாழ்த்துரையில் ராணி வேலு நாச்சியாரின் வரலாற்றை படித்தால் அவரது ஆளுமை தன்மை தலைமை பண்பு மனவலிமை பன்மொழித் திறமை ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும் வரலாறு படிக்கும் மாணவர்கள் ராணி வேலு நாச்சியாரின் தீய குணங்களை தெரிந்து கொள்வதன் மூலம் உற்சாகத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் நாட்டுப்பற்றையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.
மேலும் அவர் வேலுநாச்சியாரின் வீரத்தையும் போர் உத்திகளையும் அறிந்த மன்னர் ஹைதர் அலி ஆங்கிலேயரை எதிர்த்து போராட அவருக்கு உதவினார் என்று குறிப்பிட்டார்
இவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என்பதில் ஐயமில்லை என்றார்.

காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் இரவிச்சந்திரன் தனது சிறப்புரையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கான காரணங்களை கோடிட்டு பேசினார்.

தன் கணவரின் இறப்பிற்கு பின் வழக்கப்படி உடன்கட்டை ஏறாமல் தன் கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்துப் போராடி வென்றார் இவரது வீரம் முற்போக்கான சிந்தனை ஆட்சி நடத்திய முறை மற்றும் நடத்திய போர்கள் அடிப்படையில் தான் சரித்திரம் உறையும் பூமி என்ற பெயர் சிவகங்கை சீமைக்கு வந்தது

மேலும் மிகச்சிறந்த தனது அமைச்சரான தாண்டவராய பிள்ளையின் அறிவுரைகளை ஏற்று அதன்படி போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றார் இவரது வீரமும் விவேகமும் அனைவராலும் இன்றுவரை போற்றப்படுகிறது சிவகங்கை சீமையை தமிழக வரலாற்றில் சிறப்பாக இடம்பெற செய்ததில் இவரது பங்கு அளப்பரியது இவர் துணிச்சலையும் தைரியத்தையும் ஒவ்வொரு பெண்ணும் கடைபிடித்து வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நிறைவாக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் கலைப்புல முதன்மையர் பேரா. தனுஷ்கோடி சமூக பணித் துறை தலைவர் பேரா. கே ஆர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *