தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம்

Loading

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005 ன் கீழ் தேனி , திண்டுக்கல் , மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மேல்முறையீட்டு மனுக்களின் நிலை குறித்து மாநில தகவல் ஆணையாளர் முனைவர் ஆர்.பிரதாப் குமார் அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் , அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார் .

இந்த ஆய்வின் போது , மாநில தகவல் ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005 ன் நோக்கம் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல் , அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல் , அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு , அதை அளிக்க வகை செய்வதோடு . ஊழலை ஒழித்தல் , அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல் ஆகும் .

மேலும் , பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது . எனவே , அரசுத்துறை அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தனிக்கவனம் செலுத்தி , உரிய காலத்திற்குள் எந்தவித புகாருக்கும் , அபாரதம் ஏதுவும் செலுத்திடாத வகையில் பணியாற்றிட வேண்டும் .

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் நிலுவையில் இருந்ததது . கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை தற்போது உள்ளதால் , அந்ததந்த பகுதியைச் சார்ந்த பொதுத் தகவல் அலுவலர்களை வரவழைத்து மேல் முறையீட்டு மனுக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

அதில் , தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மனுக்களும் , திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மனுக்களும் , மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 மனுக்களும் , விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மனுக்களும் மொத்தம் மனுக்களில் 42 மனுக்களுக்கு இன்றைய தினம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது . மீதமுள்ள 8 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு . மனுதாரர்களுக்குரிய தகவல்களை உரிய காலத்திற்குள் அளித்து , அதற்குரிய பலன்களை மனுதாரர்கள் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார் . ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அன்பழகன் , உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *