கள்ளக்குறிச்சி மாவட்டம் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆலோசனைக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , வருகிற 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் , அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 23.01.2022 அன்று நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 1055 போலியோ சொட்டு மருந்து அமைக்கப்படவுள்ளது .
இம்மையங்கள் அரசு மருத்துவமனைகள் , துணை சுகாதார மையங்கள் , பள்ளிகள் , சத்துணவு மையங்கள் , சுங்கவரி வசூல் மையங்கள் , புகைவண்டி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது .
இம்முகாம்களில் வருவாய்த்துறை , சுகாதாரத்துறை , ஊட்டச்சத்துத்துறை , பள்ளிக்கல்வித்துறை , ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த பணியாளர்கள் பணிபுரிய உள்ளார்கள் . இம்முகாம் காலை 7.00 முதல் மாலை மணி வரை நடைபெறவுள்ளது .
இம்முகாம்களில் 1,30,902 குழந்ைைதகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது . எனவே , நடைபெறவிருக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் சம்மந்தப்ட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கு முறையாக விளம்பரம் செய்து , 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் , போலியோ சொட்டு மருந்து வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இவ்வாலோசனைக்கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் க.பூங்கொடி , வருவாய்த்துறை , சுகாதாரத்துறை , ஊட்டச்சத்துத்துறை , பள்ளிக்கல்வித்துறை , ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .