கன்னியாகுமரி மாவட்டம் , கோதநல்லூரில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் , கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட , செம்பருத்திவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் , செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக , புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது .

தமிழக அரசின் மூலம் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, செம்பருத்திவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களான, கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக ரூ.2000/- வீதம் ரூ.4000/-வழங்கும் திட்டம், நியாவிலைக்கடைகள் வாயிலாக 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் திட்டம், ஆவின் பால் விலையினை ரூ.3 குறைத்து வழங்கும் திட்டம், மகளிர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *