ஆவின் தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
ஆவின் தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
ஈரோடு ஜனவரி 9
ஈரோட்டில் ஆவின் பால் குளிரூட்டும் நிறுவனம் மற்றும் தீவனம் தொழிற்சாலைகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேரில் ஈரோடு மாவட்டம், ஈரோடு ஒன்றியம் சித்தோடு அருகே அமையப்பெற்றுள்ள ஆவின் குளிரூட்டும் நிறுவனத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர் அந்த நிறுவனத்தை பற்றிய சிறிய தொகுப்பு
கடந்த 1975 இல் 54.09 ஏக்கர் நிலப்பரப்பில் 1.50 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட குளிரூட்டும் இயந்திரத்துடன் தொடங்கப்பட்டு தற்போது 2.64 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது நாளொன்றிற்கு 70 ஆயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது பாலில் இருந்து பெறப்படும் பால் பவுடர் 30 மெட்ரிக் டன் திறன் கொண்ட பால்பவுடர் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பாக்கெட் பால், தயிர், மோர், வெண்ணை, நெய், பால் பவுடர், கோவா, குல்பி, பாதாம் பவுடர் குலோப்ஜாமுன் பவுடர், நறுமண பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,ஐ எஸ் ஓ சான்றுடன் வெளிநாடுகளுக்கு பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது கேன்கள் இல்லாமல் 100 சதவீத பால் 52 சிறு தொகுப்புகள் மூலம் பால் குளிரூட்டும்( பி எம் சி) மூலம் 510 பாரத பால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் தனித்துவம் சூழல் படைத்துள்ளது மேலும் தமிழகத்தில் ஈரோடு ஒன்றிய மட்டும் தனித் திறன் பெற்று செயல்பட்டு வருகிறது தரம்வாய்ந்த ஏற்றுமதி பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது 150 மெட்ரிக் டன் உற்பத்தி செய்த கால்நடை தீவனம் தொழிற்சாலை தற்போது 300 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது.
ஈரோடு ஒன்றியம் ஆனது நவீன தானியங்கி இயந்திரங்கள் மூலம் டெட்ரா பேக் நெய் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு செல்கிறது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் பொழுது ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரித்து சாதனை படைத்துள்ளது இந்த ஈரோடு ஒன்றிய ஆவின் பால் குளிரூட்டும் நிறுவனத்தில் நேரிடையாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர் பேட்டியின்போது வருகிற 19ஆம தேதி நடக்க இருக்கும் கூட்டத்திற்காக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர் நிகழ்ச்சியின்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.