Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை டிசம்பர் 23, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை டிசம்பர் 23, 2021
சென்னை: பிலவ வருடம் மார்கழி 8 ஆம் தேதி டிசம்பர் 23, 2021 வியாழக்கிழமை. சதுர்த்தி மாலை 06.27 மணிவரை அதன் பின் பஞ்சமி. ஆயில்யம் இரவு 02.41 மணி வரை அதன் பின் மகம். சந்திரன் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும். இன்றைக்கு கொண்டாட்டமான நாளாக அமையும்.
மிதுனம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குருவின் பார்வையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். இன்று காதலை சொல்ல ஏற்ற நாள். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
கடகம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் உறவினர்களிடம் இருந்து உதவிகள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். காலையிலேயே நல்ல செய்திகள் தேடி வரும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். திடீர் இடமாற்றம் பற்றிய தகவல் வரும்.
விருச்சிகம்
சந்திரன் இன்று ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும்.
தனுசு
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் மறைகிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று காதலை சொல்ல நல்ல நாள்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அதிகரிக்கும்.