மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.எஸ் அவர்களுக்கு தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ரத்தினவேலு ஜெயலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1951ம் வருடம் பிறந்தவர் பி .ஆர். சுப்பிரமணி இவரது மனைவி மாலா இவர்களுக்கு மகன் எஸ்.பகத்சிங், மகள்கள் எஸ்.கல்பனா, எஸ்.மைதிலி உள்ளனர். இவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள் உள்ளனர். இவர் பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ் .எல்.சி. ஆம்பூரில் எம் .யு. கல்லூரியில் P.U.C.படிப்பை முடித்தார். இவர் பத்திரிகை துறையில் ஆர்வம் கொண்டு ஜனசக்தி, மாலைமுரசு . தினகரன், செய்தி அலசல் ஆகிய பத்திரிகைகளில் திறம்பட பணியாற்றியவர் .பொது வாழ்விலும் பேர்ணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்கம் செயலாளராகவும் . பேரணாம்பட்டு முத்தமிழ் நற்பணி மன்றம் செயலாளராகவும் , நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் நலச் சங்கம் துணை அமைப்பாளராகவும் .திருச்சியில்1978ல் (ஆர்.எஸ்.எஸ்) வெள்ள நிவாரண குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர், தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் மாவட்டத்தின் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார்,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார்,1975ல் மிசா காலத்தில் ஓராண்டு சிறைவாசம் சென்றவர். தேசத்துரோக வழக்கில் 151 பிரிவின் கீழ் இரண்டு மாதம். அடுத்து மூன்று முறை போராட்டங்களில் பங்கெடுத்து சிறைவாசம் சென்றவர், வடலூர் ராமலிங்க மடத்தில் கணக்கராக பணிபுரிந்து உடல்நிலை பாதிப்பால் பணியிலிருந்து விலகினார். மிசாவில் இருந்தபோது சுதந்திர போராட்ட தியாகி மார்க்சியவாதி காஞ்சிபுரம் கே எஸ் பார்த்தசாரதி (கே எஸ் பி )இடம் மார்க்சியத்தை புரிந்து இடதுசாரி அமைப்பில் செயல்பட தொடங்கினார். மக்கள் பிரச்சனையை முன்வைத்து வீதி முனை நாடகங்களை அமைத்து நடித்த அனுபவம் உள்ளவர். இடதுசாரி படைப்புகளை பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் விற்பனை செய்துள்ளார். இத்தனை ஆளுமை படைத்த பி. ஆர் .எஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் .இவர் மேலும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரை சார்ந்த நண்பர்களும் உறவினர்களும் எதிர்பார்ப்பு. இன்று பிறந்தநாள் காணும் பி. ஆர். சுப்பிரமணி அவர்களை வாழ்த்தும் பத்திரிகைத் துறை சார்பாகவும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாகவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.