Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை டிசம்பர் 16, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை டிசம்பர் 16, 2021

சென்னை: பிலவ வருடம் மார்கழி 1 ஆம் தேதி டிசம்பர் 16,2021 வியாழக்கிழமை. திரயோதசி திதி மறுநாள் விடிகாலை 04.41 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி.பரணி நட்சத்திரம் காலை 07.35 மணி வரை அதன் பின் கார்த்திகை. சந்திரன் இன்று மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். கன்னி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்

ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

கடகம்
இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கன்னி
சந்திரன் பகல் 2.20 வரை எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.

துலாம்
பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்
சந்திரன் 3 மற்றும் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அம்மா வழியில் இன்று மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்
இன்று பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அனுகூலமான பலன் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *