தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது செயற்குழுக்கூட்டம் உயர் திரு கனகராஜ் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறையின் மாநில தலைவர் தலைமையில் நடந்தது இதில்மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமன் வரவேற்புரை நிகழ்த்தினார். உயர்திரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்நாடு உயர்மட்டக்குழு ஆலோசகர் கருப்பூர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கேவி தங்கபாலு அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதன் முதலில் அறிவித்தார் அதனடிப்படையில் வரும் தேர்தலில் பிரதமராக நூற்றுக்கு நூறு சதவீதம் ராகுல்காந்தி தான் வருவார் இதில் எந்த மாற்றமும் கிடையாது இதனை மையப்படுத்தி தகவல் அறியும் உரிமை சட்டத்துறையில் பணியாற்றும் அனைத்து நிர்வாகிகளும் கிராமந்தோறும் சென்று நமது செயல்பாடுகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஊக்கம் அளித்து பேசினார். செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மாநில பொதுச்செயலாளர்Ln V.T.மோனிஷ் குமார், மாநில செயலாளர் லயன் டாக்டர் . எஸ். இராஜேந்திரன் . மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனி .மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரண்யா சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சுகந்தி சேலம் மாவட்ட துணை தலைவி பிரேமலதா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.