Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை டிசம்பர் 01, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை டிசம்பர் 01, 2021
சென்னை: பிலவ வருடம் கார்த்திகை 15 ஆம் தேதி டிசம்பர் 01,2021 புதன்கிழமை. துவாதசி திதி இரவு 11.36 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. சித்திரை மாலை 06.47 மணிவரை அதன் பின் சுவாதி நட்சத்திரம். சந்திரன் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் செவ்வாயின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சந்திர மங்கல யோகம் கிடைப்பதால் பண வரவு அதிகரிக்கும். கூடவே இன்று குடும்பத்தில் சுப செலவுகள் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். நிதி நெருக்கடிகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும். இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். மன குழப்பங்கள் நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் தேடி வரும். வேலை தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வரவும் செலவும் இன்றைக்கு சரியாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சொத்து விசயமாக பேசி முடிவு செய்யலாம்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வங்கி சேமிப்பு உயரும்.குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் வேலை செய்யும் இடத்தில் மந்தநிலை ஏற்படும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்வீர்கள். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.