‘அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்” OVERSEAS MANPOWER CORPORATION LIMITED

Loading

குவைத்நாட்டிலுள்ள Kuwait Gate Foundation என்ற நிறுவனத்திடமிருந்து
குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு (Housemaid) 30
வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் பணியாளர்கள் 500 நபர்கள் தேவை.
இப்பணிக்கு விருப்புமுள்ளவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் –
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள் தகவல்
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.,இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்ததாவது:-
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER
CORPORATION LIMITED) என்பது தமிழக அரசு சார்ந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 40
வருடங்களாக வெளிநாடுகளுக்கு மனிதவளம் வழங்கும் அரசு நிறுவனமாக நம்பகத்தன்மை
பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன், லிபியா, குவைத்,
சவூதி அரேபியா, ஒமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளில் 10350-க்கும்
மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்,
மருத்துவத்துறைச்சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், திறனுடைய மற்றும் திறனற்ற
பணியாளர்கள் இந்நிறுவனம் மூலம் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குவைத்நாட்டிலுள்ள Kuwait Gate Foundation என்ற நிறுவனத்திடமிருந்து குவைத்
நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு (Housemaid) 30 வயது முதல் 40
வயதுக்குட்பட்ட பெண் பணியாளர்கள் 500 நபர்கள் தேவைப்படுகின்றனர். வீட்டு பெண்
பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம்
ரூ.32,000/- மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500/- வழங்கப்படும்.
எனவே குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம்
உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்விதகுதி மற்றும்
பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன்
omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட வேலைக்கான விவிரங்களை இந்நிறுவனத்தின்
வலைதளம் www.omcmanpower.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி அயல்நாட்டு
வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும்,
விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையம், தருமபுரி அலுவலகத்தை அணுகவும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த
அயல்நாட்டுப்பணி தேடும் பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அயல்பணி பெற்று
பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள்
தெரிவித்துள்ளார்.
ஒம்/-ச.திவ்யதர்சினி இஆப.,

மாவட்டஆட்சித்தலைவர்,
தருமபுரி மாவட்டம்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *