Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை நவம்பர் 23, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை நவம்பர் 23, 2021

சென்னை: பிலவ வருடம் கார்த்திகை 07 ஆம் தேதி நவம்பர் 22,2021 செவ்வாய்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.56 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. திருவாதிரை பகல் 01.44 அதன் பின் புனர்பூசம். சந்திரன் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பண வருமானம் அதிகரிக்கும் தொழிலில் லாபம் பெருகும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையும், சுக்கிரன் பார்வையும் ராசியில் பயணம் செய்யும் சந்திரன் மீது விழுகிறது. இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும். அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும் .உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு நீங்கி மன உற்சாகம் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தேவைகள் யாவும் நிறைவேறும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். சுப காரியங்களில் தடைகள் நீங்கும். இன்று நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குருவின் பார்வையும், சுக்கிரன் பார்வையும் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரன் மீது விழுகிறது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்
சந்திரன் இன்று பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலை விசயமாக செய்யும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நன்மைகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *