Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை நவம்பர்நவம்பர் 08 ,2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை நவம்பர்நவம்பர் 08 ,2021

சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 22 ஆம் தேதி நவம்பர் 08 ,2021 திங்கட்கிழமை. சதுர்த்தி திதி பகல் 01.17 மணி வரை அதன் பின் பஞ்சமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.49மணி வரை அதன் பின் பூராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

ரிஷபம்
சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.

கடகம்
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மன நிம்மதி உண்டாகும்.

சிம்மம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். பங்குச்சந்தை முதலீடுகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல்நிலை அற்புதமாக இருக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் எதிர்பாராத திடீர் விரய செலவுகள் உண்டாகும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆலய தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மாணவர்கள் சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *