வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து பெற்று கொடுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வன்னியர்களுக்கு அதிமுக அரசு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து பெற்று கொடுக்க வேண்டும் என இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அதிமுக அரசு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து மீண்டும் அதே இட ஒதுக்கீட்டை பெற்று கொடுக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் வேலு, முருகன், அருள், பூபதி, ஊத்தங்கரை நகர செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் கோவிந்தன் மாநில பொதுக்குழு உறுப்பினர், டி.ஆர்.நகுலன் சமுக முன்னேற்ற சங்க துணை தலைவர் மணி மாவட்ட கவுன்சிலர் வக்கீல்மூர்த்தி மு.நகர தலைவர் குமரேசன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.